அந்தமான் படகு விபத்தில் தமிழர்கள் 16 பேர் பலி
சென்னை, ஜன.26-
அந்தமான் யூனியன் பிரதேசம், போர்ட் பிளேரில் உள்ள "பே ஐலேண்ட்" அருகில் தனியாருக்கு சொந்தமான சுற்றுலாப் படகு ஒன்று இன்று மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்படகில் பயணம் செய்த 45 பயணிகளில் தமிழகத்தை சேர்ந்த 16 பேர் இறந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் சென்னையை சேர்ந்த 3 பேரும் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இறந்தவர்கள் விவரம் வருமாறு:-
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை, அனுராதா, மணிகண்டன், மேனாள், அனுசுயா, செல்வராஜ், கணபதி, உஷா, பெருமாள், சுசீலா, சாந்தாபாய், தர்ஷிணி, சாந்தி பாய் ஆகியோரும் சென்னையை சேர்ந்த கருணாகரன், துரை ஜெயக்குமார், வனஜா ஆகியோர் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
source maalaimalar