Home
» world
» இந்தோனேசியா சினாபங் எரிமலை 24 முறை வெடித்து சிதறல்: எரிமலைக்குழம்புகளை கக்கியதால் மக்கள் ஓட்டம்
இந்தோனேசியா சினாபங் எரிமலை 24 முறை வெடித்து சிதறல்: எரிமலைக்குழம்புகளை கக்கியதால் மக்கள் ஓட்டம்
ஜகர்த்தா, ஜன. 11-
இந்தோனேசியா தீவுகள் நிறைந்த நாடாகும். பூகம்ப பகுதிக்குள் வரும் இந்தோனேசியாவில் மொத்தம் 129 உறுமிக்கொண்டிருக்கும் எரிமலைகள் உள்ளன. அதில் சுமந்திரா தீவின் வடக்கு பகுதியில் 2457 மீட்டர் நீளமுடைய மவுண்ட் சினாபங் எரிமலையும் ஒன்று. இந்த எரிமலை கடந்த செப்டம்பர் மாதம் முதல் கடுமையாக உறுமிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று அந்த எரிமலை பலத்த சத்தத்துடன் 24 முறை வெடித்து சிதறியது. இதையடுத்து எரிமலை வாயிலிருந்து நெருப்பு குழம்புகள் கக்கத்தொடங்கியுள்ளன. எரிமலை சாம்பல்களும் மேல் நோக்கி பீச்சி அடிக்கப்பட்டன. இந்த சாம்பலானது 4 ஆயிரம் மீட்டர் தூரம் வரை ஆகாயத்தில் தூண்கள் போல நின்று காட்சியளித்தன.
மேலும் தொடர்ந்து எரிமலைக்குழம்புகளை கக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 7 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருந்த லட்சக்கணக்கானோர் பத்திரமான இடத்திற்கு ஓடிவிட்டனர்.
source maalaimalar