மேகாலயாவில் 4 போராளிகள் சுட்டுக்கொலை
ஷில்லாங், ஜன. 12-
மேகாலயாவில் உள்ள மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தூரா புறநகர் பகுதியின் கேராபாரா பெட்ரோல் பங்கு அருகே நேற்றிரவு வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த போராளிகள் அந்த வாகனங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
உடனே அப்பகுதியை சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை நோக்கி போராளிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இருதரப்புக்கும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடுமையான சண்டை நடந்தது. இதில் 4 போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் போராளிகள் தங்கியுள்ளனரா என அதிரடிப்படையினர் தேடிவருகின்றனர்.
அப்போது, அப்பகுதியிலிருந்த அவர்களின் முகாமிலிருந்து நவீனரக ராக்கெட்டுகள், வெடிப்பொருட்கள், தானியியங்கி துப்பாக்கிகள், கைதுப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் மற்றும் பழங்கால போர் ஆயுதங்களான வில், அம்பு, ஈட்டி கட்டாரி போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த முகாம், எடன்பெரி பகுதியில் கடந்தவாரம் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய போராளிகள் குழுவிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
source maalaimalar