Home
» news
» ஜல்லிக்கட்டின் போது திமிறி ஓடும் காளைகளைக் கண்டறிய ஜிபிஎஸ் கருவிகளை உபயோகிக்க உரிமையாளர்கள் முடிவு
ஜல்லிக்கட்டின் போது திமிறி ஓடும் காளைகளைக் கண்டறிய ஜிபிஎஸ் கருவிகளை உபயோகிக்க உரிமையாளர்கள் முடிவு
மதுரை, ஜன.12-
பொங்கல் சமயங்களில் தென் தமிழகப் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் பந்தயங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் பங்கு பெறும் காளைகளின் விலை 75,000 ரூபாயிலிருந்து தொடங்கி 2,50,000 வரை கூட செல்கின்றது. இத்தகைய காளைகள் பந்தயத்தில் பங்கு பெறும்போது சிலசமயம் திமிறிக்கொண்டு ஓடிவிடுகின்றன. அத்தைகைய சமயங்களில் இவற்றைக் கண்டுபிடிக்கப் பல நாட்களாகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவை மீண்டும் கண்டுபிடிக்கப்படாமலே கூட போய்விடுகின்றன.
அதிகவிலை கொடுத்து வாங்கி ஆசையுடன் வளர்க்கும் காளைகளை இழக்க விரும்பாத உரிமையாளர்கள் சிலர் ஜிபிஎஸ் பாதுகாப்பு முறையைப் பயன்படுத்த எண்ணியுள்ளனர். சிவகங்கை மற்றும் திருச்சி பகுதியைச் சேர்ந்த சில உரிமையாளர்கள் இத்தகைய கருவிகளைத் தங்கள் காளைகளின் கழுத்தில் கட்டிவிடத் திட்டமிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் குழுவின் இணை செயலாளரான டி.ராஜேஷ் தாங்கள் மொத்தம் 8 கருவிகளை 8,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும் இந்தமுறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவற்றை முயற்சி செய்து பார்க்க இருப்பதாகவும் தெரிவித்தார். இவை தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் மற்ற உரிமையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தக்கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் காளைகளை ஏற்றிவரும் குளிர்சாதன வண்டிகளில் கூட இந்தக் கருவியின் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படலாம் என்றும் ராஜேஷ் தெரிவித்தார்.
கால்நடை வளர்ப்புத்துறை அதிகாரிகள் இதற்கு அனுமதி கொடுக்கும் முன்னர் இத்தகைய கருவிகள் விலங்குகளின் நடத்தையை மாற்றுகின்றனவா என்பதுவும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர். சமீப காலங்களில் விலங்கு உரிமை ஆர்வலர்கள் இத்தகையப் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர்.எனவே,விலங்குகள் துன்புறுத்தப்படுவது இல்லை போன்ற கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே தற்போது இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
source maalaimalar