இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி
மெல்போர்ன், ஜன 12–
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி இன்று மெல்போர்னில் நடந்தது.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் குக் 4 ரன்னிலும் ஜோரூம் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெல் (41), பெலான்ஸ் (79), மோர்கன் (50), ஆகியோர் மட்டும் தாக்குபிடித்து ஆடினர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 269 ரன் எடுத்து இருந்தது.
270 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், பிஞ்ச் விளையாடினர். இருவரும் தொடக்கம் முதலே நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். வார்னர் 65 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த கிளார்க், பிஞ்ச்சுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். சிறப்பாக விளையாடி பிஞ்ச் சதம் அடித்தார். 121 ரன்னில் இருக்கும் போது எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து கிளார்க்கும் 43 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் களம் வந்த பெய்லி, மெக்ஸ்வெல் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 45.4வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 விகெட்டை இழந்து 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
source maalaimalar