தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள 'டோங்கா' தீவுகளை துவம்சம் செய்த சூறாவளிப் புயல்
நுகோலோபா, ஜன.12-
தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள டோங்கா தீவுகளில் நேற்று வீசிய சூறாவளிப் புயலும் அதனைத் தொடர்ந்த கடும் மழையும் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்தப் புயலினால் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்ததாகவும், மக்கள் தொகை அதிகமுள்ள வடக்கு தீவுகளில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் தேவாலயங்களின் கூரைகள் சரிந்ததாகவும் தெரிகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
தீவுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பற்றிய வான்வழி ஆய்வு இன்று நடைபெற்று வருகின்றது. இரண்டு ரோந்துப் படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவசர கால சேவைப் பிரிவின் இயக்குனர் லெவனி அஹோ தெரிவித்தார். நேற்றைய நிலைமை மிகவும் மோசமாக இருந்தது என்று குறிப்பிட்ட அவர் இன்று மாலைக்குள் என்ன நடந்துள்ளது என்பது குறித்த ஒரு முடிவுக்கு வர இயலும் என்றும் கூறினார்.
மொத்தம் 176 தீவுகள் அடங்கிய இதில் 36 தீவுகளில் 1,00,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இவற்றுள் மணிக்கு 287 கி.மீ வேகத்தில் புயலும் அதைத்தொடர்ந்து பெய்த கன மழையாலும் ஐந்தாம் எண் எச்சரிக்கை விடப்பட்டிருந்த மூன்று தீவுகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை இந்தக் காற்றின் வேகம் மணிக்கு 250 கி.மீ ஆகக் குறைந்ததால் நான்காம் நிலை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று காலை டோங்கா தீவுகளில் இருந்து தென்கிழக்கே இந்தப் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, வவாவு மற்றும் ஹாப்பாய் ஆகிய இரண்டு தீவுத் தொகுதிகளில் மட்டும் அவசர நிலை தொடர்ந்துள்ளது என்று அஹோ தெரிவித்தார்.
ஹாப்பாய் பிரிவைச் சேர்ந்த லிபுகா மற்றும் ஃபோவா பகுதிகளில் சேதம் அதிகம் என்றும் பலியானவர் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டோங்காவின் தென்பகுதியில் உள்ள முக்கியத் தீவான டோங்கடபுவில் மரங்கள் முறிந்து விழுந்ததைத் தவிர சேதம் அதிகமில்லை என்று அவர் கூறினார்.
source maalaimalar