Home
» world
» பேச்சுவார்த்தைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்: இலங்கை அமைச்சர் பேட்டி
பேச்சுவார்த்தைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்: இலங்கை அமைச்சர் பேட்டி
கொழும்பு, ஜன.12-
இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை 13.1.2014 முதல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில், இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை மீனவளத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். அப்போது மீனவர்கள் விடுதலை குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
இலங்கை- தமிழக மீனர்வர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வரும் 20-ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
source maalaimalar