ஓடும் பஸ்சில் இருந்து இளம்பெண்ணை அடித்து கீழே தள்ளிய கண்டக்டர்
பெங்களூர், ஜன. 26-
பெங்களுரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திறன் வளர்ப்பு பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ஆண்ட்ரியா அந்தோணி(23). இவர் நேற்று முன்தினம் மடிவாலாவுக்கு வால்வோ பேருந்தில் சென்றார். அப்போது, கண்டக்டர் வெங்கட்டையா சரியான பயணச்சீட்டு கொடுக்காமல் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதனால், ஆண்ட்ரியா தனது செல்போன் மூலம் போலீசாரை உதவிக்கு அழைக்க முயன்றார். அப்போது கண்டக்டர், அவரிடமிருந்து போனை பறித்துவிட்டு அடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியாவின் உதடு கிழிந்தது. பின்னர் டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து ஆண்ட்ரியாவை பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆண்ட்ரியா மற்றும் கண்டக்டர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
source maalaimalar