நடிகர் கமல்ஹாசன்-விஞ்ஞானி மஷேல்கர் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள்
புதுடெல்லி, ஜன. 25-
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 24 பேருக்கு பத்ம பூஷண் விருது, 101 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது என மொத்தம் 127 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் மஷேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், கர்நாடக இசைக்கலைஞர் பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் பண்டாரி மற்றும் அனிதா தேசாய், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சினிமா நட்சத்திரம் பரேஷ் ராவல், வித்யா பாலன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், இந்திய மகளிர் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, கபடி வீரர் சுனில் தபாஸ், தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய்குமார் பரிடா, தொழில்துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன், மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த தேனும்கல் போலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுபவர்களில் 27 பேர் பெண்கள் ஆவர். தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் இந்தாண்டு பத்ம விருதுகள் பெறுகின்றனர்.
source maalaimalar