ஐதராபாத், பிப்.14-
தெலுங்கானா வரைவு மசோதா பாராளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரபிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அடலா பிரபாகர் ரெட்டி, ஸ்ரீதர் கிருஷ்ண ரெட்டி, சத்யானந்த ராவ் ஆகிய 3 பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தனர். இது தொடர்பான கடிதத்தை அவர்கள் சோனியா காந்திக்கும், மாநில தலைவருக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் ஆந்திர சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. காலையில் சபை கூடியதும் உறுப்பினர்கள் அனைவரும் 'ஜெய் தெலுங்கானா' என மாறி மாறி கோஷங்கள் எழுப்பியவாறே இருந்ததால், அவைத்தலைவர் நதேந்தில மனோகர், சபையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திராவின் 13 மாவட்டங்களில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த பகுதிகளில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் தடைபட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

source maalaimalar