உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி: அதிகாரிகள் பயணம் செய்து ஆய்வு
சென்னை, ஜன.31-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகள் கோயம்பேடு பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள 800 மீட்டர் சோதனை ஓட்டப்பாதையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக கொண்டுவரப்பட்ட ரெயில் சோதனை ஓட்டப்பாதையில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து உயர்த்தப்பட்ட ரெயில்பாதையில் இந்த ரெயிலை ஓட்டிப்பார்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை முதலாவது ரெயில் சோதனை ஓட்டப்பாதையில் இருந்து உயர்த்தப்பட்ட ரெயில் பாதைக்கு செல்லும் சாய்வு ரெயில் பாதையில் கொண்டு நிறுத்தப்பட்டது.
மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில், பிரேசில் நாட்டு ரெயில் தயாரிப்பு நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவன பொறியாளர்கள், மெட்ரோ ரெயில் நிறுவன பொறியாளர்கள் ரெயிலில் ஏறினர். ரெயிலை கோயம்பேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொறியாளர்கள் இயக்கினர்.
அவர்களுடன் சேர்ந்து என்ஜின் டிரைவரும் ரெயிலை இயக்கினார். ரெயில் மெதுவாக சாய்வு ரெயில் பாதை வழியாக கோயம்பேடு ரெயில் நிலையம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் சென்றது. மின்சார ரெயில், டீசல் ரெயில் போன்று எந்தவித சப்தமும் இல்லாமல், மெதுவாக புறப்பட்டு சென்றது.
ரெயில் நிறுவன பொறியாளர்கள் ரெயிலில் இருந்து கொண்டு, கோயம்பேடு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல்கள் முறையாக ரெயில் என்ஜினில் உள்ள கருவி மூலம் பெறப்படுகிறதா? அதன்படி ரெயிலை நிறுத்தவும், புறப்பட்டு செல்லவும் முடிகிறதா?
ரெயிலில் உள்ள மின்சாதனங்களுக்கு தேவையான மின்சாரம் அனுப்பும் சிறிய டிரான்ஸ்பார்மர்கள், ரெயிலின் கதவு மற்றும் ஜன்னல்கள் செயல்படும் விதம், ஏ.சி, தகவல் தொடர்பு சாதனங்கள், எந்திரங்கள், பயணிகள் அமரும் பகுதி போன்றவை செயல்படும் விதம் குறித்தும் சோதனை செய்தனர்.
இவ்வாறு நேற்று காலை 7 மணியிலிருந்து மாலை 3 மணிவரை 6 முறை ஓட்டி பார்த்து சோதிக்கப்பட்டது. பூந்தமல்லி சாலையின் மேல்உயர்த்தப்பட்ட ரெயில் பாதை வழியாக சென்று கொண்டிருந்த மெட்ரோ ரெயிலை பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்றுக் கொண்டு ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
சிலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். அத்துடன் தங்கள் செல் போன்களில் மெட்ரோ ரெயிலை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னையில் நடந்து வரும் பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. சுரங்கம் தோண்டுவது, உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்கள் அமைப்பது, மின்கம்பங்கள் அமைப்பது போன்ற பணிகள் சராசரியாக 50 சதவிகிதத்திற்கு மேல் நிறைவடைந்து உள்ளன.
பணிமனையில் 800 மீட்டர் சோதனை ஓட்டப்பாதையில் முதலாவதாக வந்த ரெயில் முழுமையாக சோதனை நடத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் சோதனை நடத்தி பார்க்கப்பட்டது.
இதில் எதிர்பார்த்த அளவு ரெயில் இயங்கியதுடன், கருவிகளும் சரியாக செயல்பட்டன. இதன் மூலம் சோதனை வெற்றியடைந்து உள்ளது. தற்போது கோயம்பேடு ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கி பார்த்து சோதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் கோயம்பேடு ரெயில் நிலையத்தில் இருந்து சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர் ரெயில் நிலையம் வரை மெட்ரோ ரெயில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சோதனை 3 மாதங்கள் நடத்தப்படும், அதற்கு பிறகு பயணிகள் சேவையை இந்த மார்க்கத்தில் தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆந்திரா மாநிலம் தடாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் பிப்ரவரி மாதம் மத்தியில் சென்னைக்கு ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட உள்ளன. இந்த ரெயில் சோதனை ஓட்டத்தின் மூலம் பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட ரெயிலும் சென்னையில் ஓடி சாதனைப்படைத்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
source maalaimalar