Home
» politics
» என்னைப் போன்ற முதல்–மந்திரி எங்கும் இல்லை: ஆதரவாளர்கள் மத்தியில் கெஜ்ரிவால் ஆவேசம்
என்னைப் போன்ற முதல்–மந்திரி எங்கும் இல்லை: ஆதரவாளர்கள் மத்தியில் கெஜ்ரிவால் ஆவேசம்
புதுடெல்லி, பிப். 15–
டெல்லி சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால் முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நேற்று இரவு கொட்டும் மழையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கட்சியினர் மத்தியில் தான் பதவியை ராஜினாமா செய்து இருக்கும் விவரத்தை கூறினார். ‘‘நான் சட்டபடி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அதை செய்தேன். அதே சமயம் நானும், நம் தலைவர்களும் ஜெயிலில் இருந்து விடுதலையானது போன்ற உணர்வை அடைந்து இருக்கிறார்கள்’’ என்றார்.
ராஜினாமா பற்றி அறிந்ததும் இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். இதை அறிந்த கெஜ்ரிவால் வீட்டில் இருந்து வெளியே வந்து ஆதரவாளர்களை சந்தித்தார்.
முதல் – மந்திரி பதவியை ராஜினாமா செய்ததற்காக அவர்கள் கெஜ்ரிவாலை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது வாழ்த்துக்களை கெஜ்ரிவால் புன் முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
ஆதரவாளர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘என்னைப் போன்ற முதல்–மந்திரி வேறு எங்கும் இல்லை. ஆனால் என்னால் முடிந்ததை செய்ய மீண்டும் முயற்சிப்பேன்’’ என்று ஆவேசமாக கூறினார்.
source maalaimalar
