Home
» world
» 2 மாகாண தேர்தல் மூலம் இலங்கையில் அரசியல் ஆதாயம் தேடும் ராஜபக்சே: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
2 மாகாண தேர்தல் மூலம் இலங்கையில் அரசியல் ஆதாயம் தேடும் ராஜபக்சே: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
கொழும்பு, ஜன.26-
இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு போர்க்குற்றங்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டது. பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்கள் போர் இல்லா பிரதேசங்களிலும் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
சர்வதேச நாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்தக் கொடூரச்செயலைக் கண்டிக்கும் வகையிலும், சர்வதேச விசாரணை நடத்த ஏற்பாடு செய்யும் விதத்திலும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் இரண்டு முறை தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றின. ஆனாலும்கூட, சிங்கள ராணுவம் கட்டவிழ்த்து விட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது இலங்கை அரசு நம்பத்தகுந்த ஒரு விசாரணையை நடத்தவில்லை.
இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளது. இதற்கிடையே இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாண கவுன்சில்களுக்கு மார்ச் மாதம் தேர்தல் நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் குறித்து பிரசாரம் செய்து, மக்களின் ஆதரவைக் கவர்ந்து, வெற்றி பெற்று அரசியல் ஆதாயம் பெற ஆளும் கட்சி திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இது தொடர்பாக இடதுசாரி ஜே.வி.பி. தலைவர் சுனில் ஹந்துன்னேத்தி கருத்து தெரிவிக்கையில், ‘‘மக்களை மின்சார நாற்காலி சின்னத்துக்கு ஓட்டுப்போட சொல்லவேண்டும். ஆளும் கட்சியின் சின்னத்துக்கு அல்ல’’ என சாடினார். சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட ஆளும் கட்சி தலைவர்களை நிறுத்தி, போர்க்குற்றம் குறித்து குற்றம்சாட்டி, தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதை குறிப்பாக உணர்த்தத்தான் மின்சார நாற்காலி என இவர் குறிப்பால் உணர்த்தி உள்ளார். (மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் சில நாடுகளில் இருந்துள்ளது) ஆனால் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை ஆளும்கட்சி மறுத்துள்ளது.
ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த மந்திரியுமான மைத்ரிபாலா சிறிசேனா இதுபற்றி கூறியதாவது:–
இரண்டு மாகாண கவுன்சில்களின் பதவிக்காலம் முடிந்து விட்டது. அங்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால், அரசியல் சட்ட பிரச்சினை எழும். இந்தத் தேர்தலுக்கும், ஜெனீவாவுக்கும் (ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்ட தீர்மானத்துக்கும்) தொடர்பு இல்லை. போருக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பல்வேறு நாடுகளுக்கும் ராஜ்ய ரீதியில் கற்பிக்கப்படுகிறது. உண்மை நிலவரத்தை அவர்களிடம் சொல்கிறோம். இதற்காக பல்வேறு மந்திரிகள், பல நாடுகளிலும் பயணம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
source maalaimalar