Home
» world
» பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே விவாகரத்து: நாட்டின் முதல் பெண்ணான வாலெரியை பிரிவதாக அறிவிப்பு
பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே விவாகரத்து: நாட்டின் முதல் பெண்ணான வாலெரியை பிரிவதாக அறிவிப்பு
பாரிஸ், ஜன. 26-
பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே (59), பிரபல பத்திரிகையாளரான வாலெரி ட்ரையர்வெய்லருடன் (48) வாழ்ந்து வந்தார். ஹாலண்டேவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி செகோலின் ராயலை விவாகரத்து பெற்றிருந்தார். அந்த திருமணம் மூலம் 4 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது அதிபர் ஹாலண்டேயுடன் வாழ்ந்து வரும் காதலியும் 2 தடவை விவாகரத்து ஆனவர். இவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அதிபருடன் சேர்ந்து வாழ்வதால் பிரான்சின் முதல் பெண் என்ற அந்தஸ்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகையும், சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான ஜூலி கெயட்டுடன் ஹாலண்டேவுக்கு தொடர்பு என பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ட்ரையர்வெய்லர் 8 நாட்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வந்த அதிபர் ஹாலண்டே, நாட்டின் முதல் பெண்ணான வாலெரி ட்ரையர்வெய்லரை விட்டு பிரிவதாக அறிவித்தார்.
பொருளாதார திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஹாலண்டேயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.
இந்த பிரிவு பற்றி வாலெரி ட்ரையர் வெய்லர் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அறப்பணிகள் தொடர்பாக இன்று இந்தியாவுக்கு அவர் புறப்பட திட்டமிட்டுள்ளார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
source maalaimalar