நொய்டா, ஜன.12-
எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வாரம் மானியம் அல்லாத சிலிண்டர்களின் விலையை அதிரடியாக 200 ரூபாய்க்கு மேல் உயர்த்தியது. இதனால் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று மொய்லி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று உ.பி.யில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வீடுகளில் உபயோகிக்கும் மானிய விலை சிலிண்டரை 12-ஆக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக பத்திரிகையில் வந்த செய்தியை படித்து தெரிந்து கொண்டேன்.
பிரதமரிடம் இருந்தோ அல்லது ராகுல் காந்தியிடம் இருந்தோ எனக்கு அவ்வாறு எந்த தகவலும் வரவில்லை. இருந்தாலும் அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் மந்திரிகள் குழு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும். இந்த முடிவு எடுக்கும் முன் அரசுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் தொடர்பாக நன்கு ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.
மானிய விலை சிலிண்டரை 12 ஆக உயர்த்தினால் 3300 கோடியில் இருந்து 5800 கோடியாக மத்திய அரசின் செலவு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

source maalaimalar