Home
» politics
» ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் கெஜ்ரிவால் பிரச்சாரம்: முதல் கூட்டம் அரியானாவில் 23-ம் தேதி நடக்கிறது
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் கெஜ்ரிவால் பிரச்சாரம்: முதல் கூட்டம் அரியானாவில் 23-ம் தேதி நடக்கிறது
புதுடெல்லி, பிப். 15-
ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால், அவர் உறுதி அளித்தபடி ஜன் லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் அவர் தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். மேலும் கெஜ்ரிவால் ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லியில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
பதவியேற்ற 50 நாளில் ஆட்சியை துறந்த கெஜ்ரிவால், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடைபெற்றது. கெஜ்ரிவால் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
வரும் 23ம் தேதி கெஜ்ரிவால் தனது பிரச்சாரத்தை அரியானாவில் இருந்து தொடங்குவார் என்றும், காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு காங்கிரசும், பா.ஜனதாவும் சரியான தேர்வு அல்ல என்று மக்களிடம் எடுத்துக் கூறப்போவதாகவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் கோபால் ராய் கூறுகையில், “நாட்டில் இருந்து ஊழலை அகற்றுவதற்கு ஆம் ஆத்மியின் துடைப்பம் யாத்திரை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள தன்னார்வலர்களால் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இது, ஆம் ஆத்மியில் மக்களை இணைக்கும் ஒரு முயற்சியாகும்” என்றார்.
கெஜ்ரிவால் தலைமையில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று யோகேந்திர யாதவ் கூறினார்.
source maalaimalar