தப்பி ஓடவில்லை: என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள் - நடிகை லீனா பேட்டி
சென்னை, பிப். 15–
கர்நாடக அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த தொழில் அதிபர்கள் தேவை என்று விளம்பரம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் சுருட்டியவர் சுகாஷ் சந்திரசேகர்.
பெங்களூரைச் சேர்ந்த இவர் நடிகை லீனாவுடன் சேர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக இரண்டு பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 2 பேரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனை நடிகை லீனா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
என் மீது போடப்பட்ட வழக்குகளை நான் முறைப்படி சட்டரீதியாக சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு மாதமும் முதல் நாள் அன்று போலீசில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று எனக்கு கோர்ட்டு நிபந்தனை விதித்து உள்ளது.
இதன்படி சென்னையில் தங்கி இருந்து கையெழுத்து போட்டு வருகிறேன். ஆனால் நான் காதலன் சுகாசுடன் தப்பி சென்று விட்டதாக அவதூறு பரப்பி உள்ளனர். நான் எங்கும் தப்பி செல்லவில்லை. என் மீதான வழக்கினை சட்டப்படி சந்தித்து நிரபராதி என நிரூபிப்பேன்.
நான் தற்போது தமிழ் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளேன். சினிமாவில் எனது வளர்ச்சி பிடிக்காதவர்கள்தான் இப்படி அவதூறு பரப்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
source maalaimalar