புதுடெல்லி, பிப். 15-
டெல்லியில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மீது குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், அடுத்த கட்டமாக ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
இது தொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி தனது வலைத்தளத்தில் எழுதியுள்ள கருத்து வருமாறு:-
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, டெல்லியில் இதுவரை கண்டிராத மோசமான அரசு. பதவியை அவர் ராஜினாமா செய்ததன் மூலம், அவர்களின் கனவு முடிந்துவிட்டது. இதற்காக கடவுளுக்கு நன்றி. இந்த அரசு திட்டம் மற்றும் கொள்கைகள் இல்லாத அரசு. வெறும் வாய்ச்சவடால் மட்டுமே இருந்தது.
டெல்லி சட்டசபையில் பா.ஜனதா கட்சிதான் மிகப்பெரிய கட்சி. மெஜாரிட்டியை நிரூபிக்க காங்கிரஸ் ஆதரவை வெட்கமின்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கு அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் இல்லை. போராட்டக் குணம் இருந்தது. ஆனால் ஆட்சி நடத்த முடியவில்லை. டெல்லியில் குடிநீர் இணைப்பு விரிவாக்கம், சுகாதார வசதிகள், புதிய பள்ளி-கல்லூரிகள், சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோவின் அடுத்த கட்டப் பணிகள் போன்ற எந்த திட்டத்தையும் நினைத்துப் பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

source maalaimalar