Home
» world
» புலம் பெயர்ந்து வாழப் போன இடத்தில் விபரீதம்: இங்கிலாந்தில் 2 ஆண் குழந்தைகளை கொன்று இலங்கை பெண் தற்கொலை
புலம் பெயர்ந்து வாழப் போன இடத்தில் விபரீதம்: இங்கிலாந்தில் 2 ஆண் குழந்தைகளை கொன்று இலங்கை பெண் தற்கொலை
லண்டன், ஜன. 12-
இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பின் உச்சகட்ட போருக்குப் பிறகு உயிருக்கு பயந்த லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் தங்களின் நிலம், வீடு, தொழில் ஆகியவற்றை எல்லாம் துறந்துவிட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவ்வகையில், பிழைப்புக்கு வழிதேடி இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு சென்றவர்களில் சக்திவேல் வாகேஸ்வரன் (36) என்பவரும் ஒருவர்.
வடக்கு லண்டனில் சொந்தமாக கணக்காளர் நிறுவனம் (அக்கவுண்டண்ட் ஆபீஸ்) நடத்தி வரும் இவர், தனது மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் ஹேரோ என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் குடியிருந்து வருகிறார்.
பணி முடிந்து வழக்கம் போல் கடந்த வியாழக்கிழமை மாலை வீடு திரும்பிய சக்திவேல், தனது 5 வயது மகன், மற்றும் 7 மாத கைக்குழந்தையை கொன்று விட்டு மனைவி ஜெயவாணி (33) தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடக்கும் கோரக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் வெளி நபர்கள் யாருக்கும் தொடர்பு இருப்பதாக தோன்றவில்லை. குழந்தைகளை கொன்றுவிட்டு ஜெயவாணியும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சக்திவேலின் குடும்பம் குடியிருந்த பகுதி மிகவும் தனிமையான, அமைதியான சூழலில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தை சேர்ந்த யாரும் அக்கம்பக்கத்து வீட்டினருடன் அதிகமாக தொடர்பு வைத்திருந்தது கிடையாது என அப்பகுதியில் வசிக்கும் விஜய் ராஜா என்பவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசிக்கும் ஹரோ பிரவுன் என்ற பெண் இதற்கு எதிர்மாறான கருத்தை தெரிவித்தார். ‘சக்திவேலின் மனைவி ஜெயவாணி எப்போதும் அவருடன் சண்டையிட்டு கொண்டே இருப்பார். அவரது கூச்சல் மாதத்தின் இரண்டு மூன்று நாட்களில் இந்த பகுதி முழுவதும் எதிரொலிக்கும்.
சண்டைக்கு பிறகு சக்திவேல் சோர்வாகவும் சோகமாகவும் வீட்டைவிட்டு வெளியேறுவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.’ என்று அவர் கூறினார்.
source maalaimalar