இந்தியாவுக்கு எதிராக விளையாடும் நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு
ஆக்லாந்து, ஜன.27-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்தியா-நியூசிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகள் ஆக்லாந்து (பிப்.6-10) மற்றும் வெலிங்டன் (பிப்.14-18) மைதானங்களில் நடக்கின்றன.டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாகை சூடிய நியூசிலாந்து அணி எந்த வித மாற்றமும் இன்றி அப்படியே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர்கள் ரூதர்போர்டு, புல்டான் சிறப்பாக விளையாடி வருவதால் இந்த கூட்டணியை உடைக்க தேர்வு குழு விரும்பவில்லை.
இதனால் 3-வது ஒரு நாள் போட்டியில் சதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்திலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டெஸ்ட் தொடரின் போது, ராஸ் டெய்லரின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டெய்லர் விளையாட முடியாமல் போகலாம் என்பதை கருத்தில் கொண்டே ஜெஸ்சி ரைடர் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் இப்போதைக்கு களம் இறங்கும் டெஸ்ட் லெவன் அணியில் ரைடருக்கு இடம் கிடைக்காது என்று நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்தார்.
நியூசிலாந்து டெஸ்ட் அணி வருமாறு:- பிரன்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரென்ட் பவுல்ட், டக் பிரேஸ்வெல், பீட்டர் புல்டான், ஹமிஷ் ரூதர்போர்டு, ஜெஸ்சி ரைடர், ஐஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னெர், வாட்லிங், கனே வில்லியம்சன்.
source maalaimalar