ஜம்மு, பிப்.12-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் 1837 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
அம்மாநில சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தேசிய மாநாட்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஷெனாஸ் கனாய் எழுப்பிய டெங்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ஷாம் லால் சர்மா அந்நோய் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்ட 5896 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 1837 பேரை டெங்கு தாக்கியிருப்பது உறுதியாக தெரிய வந்ததாக கூறினார்.
சுகாதார நிறுவனங்கள் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்ட மருத்துவமனைகளில் இந்த சவாலான நோய் தாக்கியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு தாக்கியுள்ளதா என்று அறிந்து கொள்ளும் "எலிசா பரிசோதனை"யை ஒவ்வொரு மாவட்டத்திலும் துவக்கி நோய் தாக்கியிருந்தால் அதற்கான தீர்வையும் வழங்குமாறு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

source maalaimalar