பாகிஸ்தானில் கட்சி அலுவலகம் வாங்குவதற்கு ரூ.5 கோடி வழங்கிய சர்தாரி
லாகூர், பிப். 5-
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பஞ்சாபிலுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் வாங்குவதற்கு ரூ.5 கோடி வழங்கினார்.
பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பொதுத் தோ்தலில் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சி நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தோ்தலுக்கு முன்பு வரை லாகூரில் உள்ள மாடல் டவுனில் உள்ள வாடகை கட்டிடத்தில் மாகாண தலைமை அலுவலகம் இயங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வாடகை செலுத்தாததால் அலுவலகத்தை காலி செய்யுமாறு கட்டிடத்தின் உரிமையாளர் சார்பில் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அக்கட்சி தனது ஊழியர்களுக்கும் சம்பளம் தர இயலாத நிலையில் உள்ளது.
இத்தகவல் சர்தாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே, சர்தாரி தனது கட்சியில் உள்ள செல்வாக்கு மிகுந்த உறுப்பினர்களை தாராளமான கட்சிக்கு நிதி வழங்கும்படி கூறியதுடன், மாடல் டவுன் அலுவலக கட்டிடத்தை வாங்குவதற்காக தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.5 கொடி வழங்கினார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புதிய தலைமையகம், அதிபரின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி அலுவலகத்தின் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
source maalaimalar