ஆலந்தூர், பிப்.12-
பக்ரைன் நாட்டில் இருந்து விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சந்த்பாஷா (வயது 33), மகபூப்பாஷா(30) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்த உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் தனிஅறைக்கு அழைத்து சென்று ஆடைகளை கழற்றி சோதனை செய்தனர். அப்போதும் எதுவும் சிக்கவில்லை. அவர்களின் சூட்கேசில் அதிகஅளவில் சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட்டுகள் இருந்தன. குழந்தைகள் அதிகம் விரும்புவதால் சாக்லேட் வாங்கி வருவதாக கூறினார்கள்.
சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரி சாக்லேட் ஒன்றை சாப்பிட்டார். அதில் தங்கம் சிறுசிறு உருண்டைகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வாளி நிறைய தண்ணீர் கொண்டு வந்து அதில் சாக்லேட்டுகளை கொட்டி சோதனை செய்தனர். அப்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து ஆந்திர வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு குருவியாக வாலிபர்களை அனுப்பினால் அவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து தங்கத்தை பறிமுதல் செய்து விடுகிறார்கள் என்பதால் ஆந்திர வாலிபர்களை அனுப்பியது தெரியவந்தது. வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்று தங்கியிருந்து சென்னைக்கு திரும்பி வரும் வரை உள்ள செலவும், ரூ.10 ஆயிரம் பணமும் தருவதாக ஆசைவார்த்தை கூறி அனுப்பி இருப்பது தெரியவந்தது.
இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

source maalaimalar