மியூனிச்; பிப்,12-
ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி நடைபெற்று வந்த 1930-40 காலகட்டங்களில் ஹில்டிபிரான்ட் குர்லிட் என்பவர் கலைப்படைப்புகளை விற்பனை செய்துவந்தார்.அந்த சமயத்தில் ஹிட்லர் அரசு யூதர்களிடமிருந்து சூறையாடிய,திருடிய மற்றும் சிதைந்ததாகக் கருதிய ஓவியங்களை இவரிடம் விற்பனைக்குக் கொடுத்துள்ளார்கள்.
காலப்போக்கில் விற்பனையாகாமல் இருந்த ஓவியங்கள் இவருடனே தங்கிவிட்டன. தற்போது 81 வயதாகும் அவரது மகன் கோர்னிலியஸ் குர்லிட் துறவற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இவருடைய வீட்டில் அவரது தந்தை விட்டுச்சென்ற பழங்கால ஓவியங்கள் இருக்கின்றன.
கோர்னிலியஸ் வசித்துவரும் மியூனிச் வீட்டில் 1,400 பழங்கால ஓவியங்கள் இருப்பது கலைப்பொருள் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு கடந்த வருடம் வந்தபோதுதான் பத்திரிகைகளிலும் இடம் பெற்றது.
அப்போதுதான் இந்த ஓவியங்களில் மட்டிசே,சாகல் போன்ற மேதைகளின் காணாமற் போனதாகக் கருதப்பட்ட கலைப்படைப்புகள் இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் அவரது மற்ற இருப்பிடங்களில் உள்ள ஓவியங்களின் வரலாறுகளும் ஆராயப்பட்டன.
இதில் ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் வீட்டில் பிக்காசோ,ரெனோயர்,மோனெட் போன்ற பழம்பெரும் ஓவியர்களின் 60 கலைப் படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவரது தகவல் தொடர்பாளரான ஸ்டீபன் ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார்.
கோர்னிலியசின் கோரிக்கையின் பேரில் இவை யூதர்களிடமிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களா என்பது ஆய்வுசெய்யப்பட்டு வருவதாகவும், பூர்வாங்க விசாரணையின் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் இதற்கான ஆதாரம் எதுவும் கிட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும்,யூதர்களிடமிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப அளிக்கப்படும் என்றும், யூதப் பிரதிநிதிகள் இதற்கான மத்தியஸ்தக் குழுவில் இடம் பெற அழைக்கப்படக்கூடும் என்றும் ஜெர்மனி அரசு சென்ற மாதம் குறிப்பிட்டுள்ளது.

source maalaimalar