கொல்கத்தா பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பற்றி அடக்கி வாசித்த மோடி
கொல்கத்தா, பிப். 5-
கொல்கத்தாவில் இன்று நடந்த பா.ஜனதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூன்றாவது அணி பற்றி விமர்சித்தார்.
அப்போது, "மதச்சார்பின்மை என்னும் பெயரால் மூன்றாவது அணி அரசியல் செய்து வருகின்றனர். முஸ்லிம்களை வாக்கு வங்கியாகவும் அவர்கள் நடத்தி வருகின்றனர். கிழக்குப்பிராந்தியத்தை அழித்த அவர்களை இந்திய அரசியலில் இருந்தே வெளியேற்ற வேண்டும்.
மாற்றத்தை தருவதாக கூறி தேர்தலில் ஜெயித்தவர்கள் மாற்றத்தை தரவில்லை. மக்கள் மாற்றத்திற்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பா.ஜ.க. நிவர்த்தி செய்யும். எனவே பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள்" என்று மோடி கேட்டுக்கொண்டார்.
மேலும், மத்தியில் பா.ஜ.க ஆட்சியும், மாநிலத்தில் மம்தாவின் ஆட்சியும் நடைபெறும் போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எங்களை வழிநடத்துவார் என்று கூறிய மோடி, பெங்காலி மொழியிலும் சில வார்த்தைகள் பேசினார். மூன்றாவது அணியை கடுமையாக விமர்சித்த மோடி, மம்தாவை அதிகம் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source maalaimalar