மூன்றாவது அணி என்ற கருத்துக்கு பிரியாவிடை: மோடி
பிப். 5-கொல்கத்தா,

மூன்றாவது அணி ஆட்சி செய்து வரும் மாநிலங்கள் அனைத்தும் பின்தங்கியுள்ளதாகவும், வரும் பாராளுமன்ற தோ்தலில் அவர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, “மூன்றாவது அணியைப் பற்றி பேசுபவர்கள், தற்போதைய சூழ்நிலையில் ஆதரவுக் காற்று எந்த பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பா.ஜ.க ஆட்சியமைக்கும்” என்று கூறினார்.
மூன்றாவது அணி குறித்து பேசும்போது “இந்தியாவை மூன்றாம் தர நாடாக மாற்றுவதே அவர்களின் நோக்கமாகும். அதனால்தான் அவர்கள் ஆட்சி செய்து வரும் கிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பின்தங்கி உள்ளன. இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற கருத்திற்கு பிரியாவிடை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. மேற்கு மாநிலங்களில் இதுவரை எந்த மூன்றாவது அணியும் ஆட்சி அமைத்ததில்லை.” என்றார்.
“எப்போதெல்லாம் தோ்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் ஏழை மக்களை பற்றியும், மதச்சார்பின்மை பற்றியும் பேசத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக அவர்கள் எதையும் செய்ததில்லை. முஸ்லிம்களை வாக்காளர்களாக மட்டுமே கருதுகின்றனர்” என்றும் மோடி குற்றம் சாட்டினார்.
குஜராத்தில் சிறுபான்மையினரின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாக கூறிய மோடி, அரசாங்கம் என்பது தேசியவாதம் என்ற ஒரே ஒரு மதப் புத்தகத்தைதான் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
source maalaimalar