ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரின் முன்ஜாமீன் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, பிப்.15-
தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியதர்ஷிணி என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
பிரியதர்ஷிணி சார்பில் மூத்த வக்கீல் எம்.என்.கிருஷ்ணமணி ஆஜராகி வாதாடினார். வருண்குமார் மற்றும் பிரியதர்ஷிணி ஆகிய இருவரும் 2007ம் ஆண்டில் இருந்து நண்பர்களாக இருந்ததாகவும், தன்னை திருமணம் செய்வதாக வருண்குமார் வாக்களித்தார்.
2011ம் ஆண்டில் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றதும் அவர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பிரியதர்ஷிணி புகார் அளித்திருந்தார். மேலும் வருண்குமாரின் பெற்றோர் 2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஒன்றையும் வரதட்சணையாகக் கேட்டதாக தன்னுடைய புகாரில் பிரியதர்ஷிணி தெரிவித்திருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், ஐகோர்ட்டு ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது. தன்னால் வருண்குமார் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை கொடுக்க முடியாததால் அவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.
வரதட்சணை கொடுப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை. முடியவில்லை என்றால் தற்கொலை செய்துகொள். என்னுடைய பதவிக்காகத்தான் இந்த வரதட்சணை என்று வருண்குமார் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
வருண்குமாருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டு அவர் வெளியில் இருந்தால் அவருக்கு எதிரான வழக்கின் மீது விசாரணை ஒழுங்காக நடக்காது என்பதால் அவருடைய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். விசாரணைக்குப் பிறகு சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு வருண்குமாருக்கு முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அவருடைய பெற்றோருக்கு முன்ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பிரியதர்ஷிணி கூறினார். காதலர் தினமான நேற்று காதலித்து ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இதுபோன்ற ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
source maalaimalar