Home
» world
» இன்டர்நெட் கட்டுப்பாடு சட்டத்தை எதிர்த்து துருக்கியில் கலவரம்: போலீஸ் துப்பாக்கி சூடு
இன்டர்நெட் கட்டுப்பாடு சட்டத்தை எதிர்த்து துருக்கியில் கலவரம்: போலீஸ் துப்பாக்கி சூடு
அங்காரா, பிப். 9–
துருக்கியில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்து புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அங்கு ஏராளமான வெப்சைட்டுகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் ரீசெப் தய்யிப் எர்டோகன் தனது அரசின் ஊழலை மறைக்க இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த புதிய சட்டத்தை வாபஸ் பெறக்கோரி இஸ்தான்புல் நகரில் நேற்று கலவரத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள தக்சிம் சதுக்கத்தில் திரண்ட ஆயிரக் கணக்கானவர்கள் பிரதமர் எர்டோகன் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது கற்களையும், தீப்பந்தங்களையும் வீசினர். வன்முறை சம்பவங்களை தடுக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தும் கூட்டம் கலையவில்லை.
எனவே, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை போலீசார் கலைத்தனர். பிரதமர் எர்டோகன் மீதான ஊழல் புகார் மீது கடந்த ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது டுவிட்டர் ‘பேஸ்புக்’ இணைய தளங்களின் மூலம் போராட்டக்காரர்கள் தகவல்களை பரிமாரிக் கொண்டனர்.
source maalaimalar