பிரணாப்பை பிரதமராக்க விரும்பாத காந்தி குடும்பத்தினர்: மோடி தாக்கு
கொல்கத்தா, பிப். 5-
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் இன்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:-
இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ஜனநாயக முறைப்படி அவருக்கு பின் கட்சியின் மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜி பிரதமர் ஆகியிருக்க வேண்டும். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் பிரணாப்பிற்கு அமைச்சர் பதவிகூட தரப்படவில்லை.
இதே போல் 2004ல் மூத்த தலைவரான பிரணாப்பிற்கு மீண்டும் வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. இது சோனியா காந்தியின் தனிப்பட்ட முடிவாகும். அவர் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். பிரணாப்பின் சொந்த மாநில மக்களாகிய நீங்கள் இதை மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
source maalaimalar