தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம்: பா.ஜ.க. தலைவர் தகவல்
பிரதமர் மன்மோகன் சிங்கை விஜயகாந்த் சந்தித்தை தொடர்ந்து அவர் காங்கிரஸ் பக்கம் சாய்வார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் – தே.மு.தி.க. கூட்டணி அமைவதற்கான அறிகுறிகள் தென் படவில்லை.
இதற்கிடையில் பா.ஜனதா தரப்பிலும் தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இது பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
கூட்டணி அமைவது தொடர்பாக பா.ஜனதா தொடர்ந்து முயற்சி மேற் கொண்டு வருகிறது. வலுவான ஒரு கூட்டணியை அமைக்க இன்னும் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
தே.மு.தி.க. தரப்பில் இருந்தும் எங்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கூட்டணிக்கான கதவுகள் மூடப்படவில்லை. இதில் அவசரம் காட்ட தேவையில்லை. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. பொறுமையோடு இருப்போம். நிச்சயம் வலுவான கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்த் எடுக்கப்போகும் முடிவை பொறுத்து தான் தமிழக அரசியல் சதுரங்கத்தில் ஆட்டம் களை கட்டும். அதுவரை காத்து இருப்போம்.
source maalaimalar