Home
» politics
» டெல்லியில் ஊழல் தடுப்பு உதவி எண் மூலம் குவியும் புகார்கள் கெஜ்ரிவால் அறிவித்த திட்டம் மூலம் 2 போலீசார் கைது...
டெல்லியில் ஊழல் தடுப்பு உதவி எண் மூலம் குவியும் புகார்கள் கெஜ்ரிவால் அறிவித்த திட்டம் மூலம் 2 போலீசார் கைது...
டெல்லி: டெல்லியில் ஊழல் தடுப்பு உதவி எண் மூலம் கிடைத்த தகவலின்படி காவலர்கள் 2 பேரை கைது செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழல் கண்காணிப்பு பிரிவு மூலம் தொலைபேசி எண்களை வெளியிட்டு பொதுமக்கள் புகார் அளிக்க மாநில முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் நடவடிக்கை எடுத்தார்.இதனையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான புகார்கள் வந்தன. இப்புகார்களை பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி குறிப்பிட்ட காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார் மாமூல் கேட்பதாக ஸ்வெட்டர் வியாபாரி ஒருவர் தெரிவித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புகார் அளித்த ஸ்வெட்டர் வியாபாரியின் கடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், உள்ளூர் காவலர்கள் 2 பேர் மூன்றாயிரம் ரூபாய் மாமூல் பெற்ற போது கையும் களவுமாக பிடிப்பட்டனர். தற்போது மக்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் ஊழல் தடுப்பு உதவிக்கு 1031 என்ற தொலைபேசி எண்ணை டெல்லி அரசு அறிவித்துள்ளது.
source dinakaran