Home
» news
» மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை:நாளை போகி பண்டிகை : டயர், பிளாஸ்டிக் எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை:நாளை போகி பண்டிகை : டயர், பிளாஸ்டிக் எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் செல்ல தொடங்கி உள்ளனர். சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக போகி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. Ôபழையன கழிதலும், புதியன புகுதலும்Õ என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள உபயோகமற்ற பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி போகியை கொண்டாடுகின்றனர். ஆனால், தீ அதிக நேரம் எரிய வேண்டும் என்பதற்காக பல இடங்களில் டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரிக்கின்றனர். சென்னை போன்ற மக்கள் அதிகம் வசிக்கும் பெரு நகரங்களில் டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, போகி பண்டிகையன்று புகையால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, சுற்றுசூழல் அமைப்புகள், இயற்கை பாதுகாப்பு அமைப்புகள், தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறையினர் போன்ற பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் போகி அன்று வீட்டில் இருக்கும் பழைய பாய், துடைப்பம் போன்ற பொருட்களை எரிப்பார்கள். இதனால் அதிக மாசு ஏற்பட்டதில்லை. இப்போது டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் காற்று அதிகளவு மாசுப்படுவதுடன் மக்களுக்கு உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரி கூறினார்.
டாக்டர்கள் எச்சரிக்கை : டாக்டர்கள் கூறுகையில்,போகி பண்டிகை அன்று டயர், பிளாஸ்டிக், டியூப் போன்ற நச்சு புகைகளை வெளிப்படுத்தும் பொருட்களை எரிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த புகையை சுவாசிப்பதன் மூலம், மூச்சு திணறல், கண் எரிச்சல், ஆஸ்துமா போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.
மேலும், போகிக்கு முந்தைய நாள் இரவிலேயே பல இடங்களில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை விடிய விடிய எரிக்கின்றனர். இதற்காகவே பஞ்சர் போடுகள் கடைகளில் இருந்து டயர்களை திருடி வந்து எரிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. டயர்களை திருடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இன்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
source dinakaran