டாக்கா, ஜன.12-
வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை.
வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 300-ல் 231 இடங்களைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பிரதமரான ஹசினா இன்று பிரதமராக பதிவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி அப்துல் ஹமீத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 48 பேர் கொண்ட மந்திரி சபையும் பதவி ஏற்றுக்கொண்டது.
இந்த விழாவில் ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

source maalaimalar