Home
» news
» மனிதநேய அடிப்படையில் கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் சேர்க்க உதவிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்
மனிதநேய அடிப்படையில் கர்ப்பிணியை ஆஸ்பத்திரியில் சேர்க்க உதவிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்
ஸ்ரீநகர், ஜன. 12-
கடுமையான பனி காலங்களில் காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளின் சாலைகளில் உறைபனி மண்டி கிடக்கிறது. தற்போது அங்கு தொடர்ந்து பனி கொட்டி வருவதால் பல மாவட்டங்களின் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நீண்ட நாட்களூக்கு பிறகு ஒருவழி பாதையாக மட்டும் சமீபத்தில் திறந்து விடப்பட்டது.
பண்டிபோர் மாவட்டத்தை மாநிலத்தின் பிற பகுதியுடன் இணைக்கும் பிரதான சாலைகளிலும், உள்ளூருக்கு செல்லும் கிளை சாலைகளிலும் வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாவட்டத்தின் தவார் கிராமத்தை சேர்ந்த முஹம்மது அஷ்ரப் என்பவர் நேற்று குரேஜ் பகுதியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்துக்கு பதற்றத்துடன் ஓடி வந்தார். 6 மாத கர்ப்பிணியான தனது மனைவி கருச்சிதைவு ஏற்படும் அபாயகரமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தனது மனைவி மற்றும் அவரது வயிற்றில் வளரும் கருவை காபாற்ற உதவ வேண்டும் எனவும் அவர் கதறினார்.
அங்கு பணியில் இருந்த வீரர்கள் இத்தகவலை ராணுவ உயரதிகாரிகளுக்கு அவசரமாக தெரிவித்தனர். உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண்ணையும் அவரது வயிற்றுக்குள் வளரும் 6 மாத கருவையும் காப்பாற்றியே தீருவது என முடிவெடுத்த ராணுவ உயரதிகாரி, மனிதநேய அடிப்படையில் 2 உயிர்களை காப்பாற்ற உதவிடும்படி விமானப்படை உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்த்து, உடனடியாக இந்திய விமானப்படையின் நவீன ரக எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் அந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் குர்ஷித் நிஷா மற்றும் அவருக்கு துணையாக அவரது குடும்பத்தினர் 3 பேரை தவார் கிராமத்தில் இருந்து ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் அவர்களை மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் இறக்கி விட்டது.
இதேபோல், குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஃபுர்கியான் பகுதியை சேர்ந்த ஒருவர் கடுமையான டைபாயிட் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சாலை வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரையும் விமானப்படை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ராணுவத்தினர் உதவி செய்தனர்.
source maalaimalar