இந்தியாவுக்கு தங்கம் கடத்திவர முயன்ற நபர் சார்ஜா விமான நிலையத்தில் கைது
துபாய், ஜன. 12-
சார்ஜாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட இருந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளை அந்நாட்டின் விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இந்தியர் ஒருவர் 699 கிராம் எடையுள்ள 12 தங்க கட்டிகளை மறைத்து கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சார்ஜாவில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை மறைத்து, கடத்த முயன்றது ஏன்? என போலீசார் விசாரித்தபோது, 'அந்த 12 தங்க கட்டிகளையும் இந்தியாவுக்கு கொண்டு சென்று விற்று விடலாம். அதன் மூலம் ஒரு பெரிய தொகை லாபமாக கிடைக்கும் என்று தீர்மானித்தேன்.
வெளிப்படையாக எடுத்து சென்றால் இந்திய சுங்கத்துறையினர் அந்த தங்கத்துக்கு இறக்குமதி வரியை வசூலிப்பார்கள். வரியை கட்டிய பிறகு என்னால் அதிக லாபம் சம்பாதிக்க முடியாது. அதனால் தான், தங்க கட்டிகளை மறைத்து கொண்டு செல்ல முயன்றேன்’ என்று பிடிபட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எங்கள் நாட்டின் சட்டங்களை மீறிய வகையில் இது போன்று கள்ளத்தனமாக இங்கிருந்து பொருட்களை கடத்த முயற்சிப்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சார்ஜா போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
source maalaimalar