லிபியா சிறையில் இருந்து 92 கைதிகள் தப்பி ஓட்டம்
திரிபோலி, பிப். 15-
லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் ஜிலிட்டன் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் 220 கிரிமினல் மற்றும் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை.
இந்த சிறையில் வெள்ளிக்கிழமையன்று 4 போலீசார் மட்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கைதிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, மருத்துவரை அனுப்பும்படி கேட்டனர். இதனை நம்பிய போலீசார், சிறைக் கதவைத் திறந்துள்ளனர்.
அப்போது வெளியேறிய கைதிகள், காவலாளிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தப்பி ஓடிய 92 கைதிகளில் 19 பேரை உடனடியாக பிடித்தனர். கைதிகளை பிடிக்கும் முயற்சியில் போலீசார் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மாத துவக்கத்தில் தலைநகர் திரிபோலியில் உள்ள சிறையில் 54 கைதிகள் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.