ஜெர்மனியில் குழந்தைகள் ஆபாசபட விவகாரம்: மந்திரி ராஜினாமா
பெர்லின், பிப். 15-
ஜெர்மனியில் உணவு மற்றும் விவசாயத்துறை மந்திரியாக இருந்தவர் ஹன்ஸ் பீட்டர் பிரிட்ரிச். இவர், குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் விசாரணை தொடர்பான ரகசியங்களை வெளியிட்டதற்காக இவரை இருநாட்களுக்கு முன் பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் உள்துறை மந்திரியான எடாத்தேவுக்கு எதிரான இவ்வழக்கில் முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக ஹன்ஸ் பீட்டர் பிரிட்ரிச் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அவர் ஏற்றுக்கொண்டு பதவி விலகினார்.
இதுபற்றி அதிபர் மெர்கெல் கூறுகையில், “பிரிட்ரிச்சின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எடாத்தே மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
source maalaimalar