Home
» news
» ஓமந்தூரார் தோட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அடுத்து வாரம் திறக்கப்படுகிறது
ஓமந்தூரார் தோட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அடுத்து வாரம் திறக்கப்படுகிறது
சென்னை, பிப். 15–
சென்னையில் ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னையில் ஏழை எளிய மக்கள் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்ற நோகத்தில் முதல் – அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இது உள்ளது. அவரது விருப்பம் நிறைவேற்றும் வகையில் அந்த கட்டிடம் மருத்துவமனைக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டது.
மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகள் ரூ. 32 கோடி செலவிலும், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் ரூ. 70 கோடியிலும் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவ துறையில் உயர் சிகிச்சை தேவையான நவீன உபகரணங்கள் இந்த மருத்துவமனையில் பொறுத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு துறை டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தரைதளம் மற்றும் 6 தளம் முழுவதும் இறுதிகட்டப் பணிகள் முடிந்தன. வார்டுகளில் படுக்கைகள் போடப்பட்டுள்ளது.
சுகாதாரமான முறையில் வார்டுகளை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் மற்றும் நவீன கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. வார்டில் இருந்து சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு பேட்டரி கார் மூலம் நோயாளிகளை அழைத்து செல்ல இது பயன்படுத்தப்படுகிறது. லிப்ட் வசதி இருந்தாலும் 6 தளத்திற்கு நடந்து செல்லவும், பேட்டரி காரில் செல்லவும் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிற 21–ம் தேதி அல்லது 24–ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை முழு மூச்சில் செய்து வருகிறது.
source maalaimalar