பாராளுமன்ற தேர்தலில் முகேஷ் அம்பானி விவகாரம் பெரிதாக வெடிக்குமா?
புதுடெல்லி, பிப்.15-
டெல்லி மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்படவிருந்த ஜன் லோக்பால் மசோதா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
இம்மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனால் பதவி விலகப்போவதாக ஏற்கனவே கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதன்படி மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதால் நேற்று இரவு தனது அமைச்சரவையை கூட்டி பதவி விலகுவது என்ற முடிவை அவர் எடுத்தார். பின்னர் சட்டப்பேரவை வளாகத்திலிருந்து தனது கட்சித் தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் முன் அவர் உரையாற்றினார்.
அப்போது முகேஷ் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டதாக கடுமையாக சாடினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியானது தனது கடை என்றும் அந்த கடையில் எதை வேண்டுமானாலும் தன்னால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று முன்னொரு சமயம் அம்பானி கூறியதை மேற்கோள் காட்டிய அவர் கடந்த 10 வருடங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அம்பானி தான் இயக்கி வருவதாக கூறினார்.
அதே சமயத்தில் பா.ஜ.கவையும் கெஜ்ரிவால் விட்டுவைக்கவில்லை. மோடியை பின்னால் இருந்து இயக்குவதே அம்பானி தான் என்றும் அப்படியில்லையென்றால் மோடிக்கு ஏராளமான பணம் எங்கிருந்து கிடைக்கிறது என கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை 1970களில் இந்திரா காந்தி அப்போதிருந்த எதிர்க்கட்சிகளை பார்த்து முழங்குவதோடு ஒத்துப்போவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அப்போது இந்திரா காந்தி எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொழிலதிபர்களின் தரகர்களாக செயல்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அம்பானி விவகாரம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
source maalaimalar