மும்பை, ஜன. 11–
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று காலை நியூசிலாந்து புறப்பட்டது.
அந்த அணியுடன் 2 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.
இந்தியா– நியூசிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் வருகிற 19–ந்தேதி நடக்கிறது. 31–ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது.
முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6–ந்தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. பிப்ரவரி 18–ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.
இந்திய அணி கடைசியாக 2009–ம் ஆண்டு நியூசிலாந்து சென்றது. அப்போது 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதேபோல டெஸ்ட் தொடரை 1–0 என்ற கணக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி சாதனை புரிந்தது.
நியூசிலாந்து பயணத்தில் விளையாடும் இந்திய ஒருநாள் போட்டி அணி வீரர்கள் வருமாறு:–
டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஈஷ்வர் பாண்டே, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன்.
இதில் ரெய்னா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி ஆகிய வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக முரளிவிஜய், புஜாரா, ஜாகீர்கான், உமேஷ் யாதவ், விர்த்திமான் சகா ஆகியோர் டெஸ்ட் அணியில் உள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார்கள்.
source maalaimalar