மஸ்கட், ஜன.5-
ஓமனில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இந்திய குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல் ஷம்ஸ் பகுதி சாலையில் சுனில் குமார் தரோல் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தீபு நாயர், கோபு நாயர் குடும்பத்தினருடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்பொது எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த வாகனம் அந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சுனில் குமார் தரோலின் குழந்தைகள் வேதா, வைபவ் மற்றும் கோபு நாயரின் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
சுனில் குமார் தரோலின் மனைவி ஸ்ரீஜா, கோபு நாயரின் மனைவி ஆது ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
source maalaimalar