புதுடெல்லி, ஜன. 26-
டெல்லியில் ஆப்பிரிக்க பெண்கள் போதை மருந்து விற்பனை மற்றும் பாலியல் தொழில் செய்வதாக குற்றம் சாட்டிய சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பாரதி, அப்பகுதியில் திடீர் சோதனை செய்தார். அப்போது அவர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்தனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சோம்நாத் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞருக்கும், மகளிர் ஆணைய தலைவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, ‘மோடியிடம் எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?’ என்று கேட்டார். பா.ஜனதா தலைவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஊடகங்கள் தன்னை அவமதிப்பதாகவும் கூறினார். அவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சோம்நாத் கூறினார். மேலும் அரசியல் நோக்கத்துடன் தன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மகளிர் ஆணையம் வலியுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

source maalaimalar