மூன்று மாதங்களில் தமிழ் கற்றுக்கொள்வேன்- ஆஹா கல்யாணம் நாயகி வாணி கபூர்
இந்தியில் வெற்றிப் படங்களை தயாரித்த யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது தமிழில் 'ஆஹா கல்யாணம்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பை தொடங்கியுள்ளது.
இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தரண் இசையில், கார்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து திறன்களை கொண்ட இப்படத்தின் நாயகி வாணி கபூர் தற்போது உற்சாகத்தின் உச்சில் இருக்கிறாராம். இதற்கு காரணம் பிலிம் பேர் பத்திரிகை வழங்கும் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை ‘ஷுட்ட் தேசி ரொமன்ஸ்’ என்னும் இந்திப்படத்திற்கு வழங்கியுள்ளது.
இவ்விருதைப்பற்றி வாணி கபூர் கூறும்போது, சிறந்த புதுமுக நடிகைக்கான விருது அறிவிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த விருதுக்கும் தமிழகத்துக்கும் சம்மந்தம் உண்டு. இன்னும் மூன்று மாதங்களில் தமிழ் கற்றுக்கொள்ளப்போவதாகவும் கூறி நன்றி தெரிவித்தார்.
வாணி கபூர் மூலம் தமிழ் திரை உலகுக்கு மேலும் ஒரு திறமையான நடிகை கிடைப்பார் என நம்பலாம்.
source maalaimalar