நேபாள நாட்டிற்கு பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்தியா நிதி உதவி
காத்மாண்டு, பிப்.14-
நேபாளத்தின் தெற்குப் பகுதி மாவட்டமான பார்சாவில் உள்ள ஸ்ரீ சில்லா உச்சஞ்சல் என்ற அரசு அங்கீகாரம் பெற்ற பழமையான மேல்நிலைப் பள்ளி ஒன்றிற்கான புதிய கட்டிடம் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் 20.31 மில்லியன் மதிப்பில் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை நேபாளத்திற்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ரே நேற்று திறந்து வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சியில் அவர் பேசும்போது 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிலும் 38 சதவிகிதம் பெண்கள் பயிலும் இந்தப் பள்ளியில் மேம்பட்ட சூழலை உருவாக்கவும், மாவட்டக் கல்வி வளர்ச்சிக்கும் இத்திட்டம் பங்களிக்கும் என்று ரே குறிப்பிட்டார். இதுபோன்று இந்திய உதவியுடன் செயல்படுத்தப்படும் பல கல்வித் திட்டங்கள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை ரே வெளியிட்டார்.
இதுமட்டுமின்றி, ஏற்கனவே நான்கு திட்டங்கள் ரூ.70.2 மில்லியன் செலவில் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்னும் இரண்டு அபிவிருத்தித் திட்டங்களை ரூ.25.9 மில்லியன் மானிய உதவியுடன் இந்தியா பார்சா மாவட்டத்தில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். பார்சா மாவட்டத்தில் உள்ள பிர்குஞ்-ராக்சல்(இந்தியா) மற்றும் பிரட் நகர்-ஜோக்பனி(இந்தியா) ஒருங்கிணைப்பு சோதனைச் சாவடிகள் இந்திய அரசின் மானிய உதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும்போது இரு நாடுகளுக்கிடையேயான சுங்க மற்றும் குடியேற்ற சேவைகள் சுமூகமாக நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
source maalaimalar