Home
» politics
» பாராளுமன்றத்தில் ரகளை: என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங் உருக்கம்
பாராளுமன்றத்தில் ரகளை: என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங் உருக்கம்
பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது ஆந்திர எம்.பி.க்களுடன் சேர்ந்து 4 மத்திய மந்திரிகளும் கோஷம் எழுப்பினார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன்சிங் திடீர் என்று எழுந்து, ‘‘இந்த சபையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்து என் இதயத்தில் இருந்து ரத்தம் கசிந்து விட்டது’’ என்று உருக்கமாக கூறினார்.
‘‘நாங்கள் எல்லாம் அமைதிப்படுத்த முயன்றும் எம்.பி.க்கள் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல’’ என்றும் மன்மோகன்சிங் கோபத்துடன் கூறினார். இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று மத்திய மந்திரி கமல்நாத்தும் எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் எதிர்த்து மத்திய மந்திரிகள் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source maalaimalar