ஆட்சி நடத்த முடியாமல் தப்பிக்க நினைக்கும் கெஜ்ரிவால்: பா.ஜ.க. தாக்கு
புதுடெல்லி, பிப்.10-
ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தவித்து வருகிறார். மேலும் இம்மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனால் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,
“ஊழல் மிகுந்த காங்கிரசின் தோள்களில் (ஆதரவில்) இருந்துகொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்கிறார் கெஜ்ரிவால். அது முடியாது என்று தெரிந்தவுடன் தனது பதவியை விட்டு ஓட முயற்சி செய்கிறார்” என்று தெரிவித்தார்.
மற்றொரு தலைவர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “இச்செய்தி எனக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. அவர் யாரையும் மிரட்டத் தேவையில்லை. அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு தாராளமாக பதவி விலகலாம்” என்று தெரிவித்தார்.
இம்மசோதாவிற்கு உள்துறை அமைச்சகத்திடம் முன் அனுமதியை பெற வேண்டும் என்று காங்கிரசும், பா.ஜனதாவும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று இம்மசோதா குறித்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
source maalaimalar