லிபியாவின் அரசு பத்திரிகையாளர் துப்பாக்கி முனையில் கடத்தல்
திரிபோலி, பிப்.12-
லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் நீண்ட கால சர்வாதிகாரியான முயம்மார் கடாபி நீக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட புதிய அரசு அந்நாட்டின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் நிலை நிறுத்த இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றது. கடாபியின் ஆட்சியை வீழ்த்த உதவிய கிளர்ச்சிப் போராளிகளால் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எல்லையில்லா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஊடக கண்காணிப்பு முன்கூட்டியே எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
அதற்கேற்றாற்போல், கடந்த டிசம்பர் மாதம் ஆங்கிலத்தில் பிரத்தியேக ஒலிபரப்பு செய்த ஒரு லிபிய வானொலி நிலையத்தின் உரிமையாளர், தலைநகர் திரிபோலியில் குண்டுகளால் துளைக்கப்பட்டு இறந்து கிடந்தார். சென்ற வாரம் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான பெங்காசியில் இரண்டு தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் தாக்கப்பட்டன. மூன்று சிவில் சமூக தன்னார்வலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அவர்களது சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அரசு செய்தி நிறுவனமான லானாவில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் அப்துல் பசெட் பவுடியா இன்று தெரிவித்துள்ளார். தலைநகர் திரிபோலியிலுள்ள உணவகம் அருகே ராணுவ உடையில் வந்த ஐந்து பேர் யூனுஸ் அலி யூனுஸ் என்ற அந்த பத்திரிகையாளரைக் கடத்திக் கொண்டு போய் மறைவிடத்தில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து பாதுகாப்பு சேவைகளுடனும் தொடர்பு கொண்டபோதிலும் அவரது நிலைமை குறித்து தெரியவில்லை என்ற அவர் இந்தக் கடத்தலுக்கும், பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கும் கண்டனம் தெரிவித்தார்.
இத்தகைய குழப்பங்களைத் தடுக்க இயலாத நிலையில் நாட்டை ஆளும் பொது தேசிய காங்கிரசின் உயர் தலைமை தங்களது ஆட்சிக் காலத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது மக்களிடையே எதிர்ப்பையே உருவாக்கியுள்ளது.
source maalaimalar