ஸ்ரீநகர், பிப்.13-
ஜம்மு காஷ்மீரில் பெண் மருத்துவரை பாலியல் தொந்தரவு செய்த புகார் தொடர்பாக, முன்னாள் மந்திரி ஷபீர் அகமது கானை கைது செய்ய சபாநாயகர் அனுமதி அளித்தார். இதனால் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலையில், ஷபீர் அகமது கான் தலைமறைவானார்.
அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியும் அவர் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அவரை உடனடியாக போலீசில் சரண் அடையும்படி கேட்டுக்கொண்டது. அத்துடன், அவரை கைது செய்தால் உடனடியாக சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து வெளியே வந்த ஷபீர் அகமது கான் இன்று ஸ்ரீநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. என்னுடைய அரசியல் செல்வாக்கை அழிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை என்மீது சுமத்தியுள்ளனர். நான் அப்பாவி, 101 சதவீதம் அப்பாவி.
விசாரணையில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன். நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது. நீதிமன்றத்தின் ஆணைப்படி விசாரிக்க வந்துள்ள விசாரணைக்குழுவிடம் என்னுடைய தரப்பு கருத்துக்களை கூறவே நான் இங்கு வந்துள்ளேன்.
ராஜினாமா செய்தபிறகு நான் எங்கும் ஓடி மறையவில்லை. ஒரு குடிமகனாக நிரபராதி என்று நிரூபிக்க நீதிமன்றத்தை அணுக எனக்கு உரிமை இருக்கிறது.
ஊடகங்களோடு தொடர்பிலிருந்தேன். சில ஊடகங்களில் அறிக்கைகளையும் அளித்திருந்தேன். இறைவன் அருளால், நான் நிரபராதி என்று நிரூபிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

source maalaimalar