கணவரை காணவில்லை என்ற நயன்தாரா பட விளம்பர போஸ்டர்களை இந்து மக்கள் கட்சியினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நயன்தாரா படங்களுக்கு தொடர்ந்து சர்ச்சை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்படுகின்றன.
ஆர்யா ஜோடியாக நடித்த ‘ராஜாராணி’ படத்துக்காக நூதன விளம்பரம் மற்றும் போஸ்டரை வெளியிட்டார்கள். இருவரும் கிறிஸ்தவ கோவிலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்று இருந்தது. நிஜமாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? என்று நகரம் முழுவதும் பேச்சு கிளம்பின. பிறகு அது பட போஸ்டர் என அறிந்து அமைதியானார்கள்.
அப்போதே இந்த போஸ்டருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. தற்போது அனாமிகா படத்துக்காக இன்னொரு சர்ச்சை போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா கணவனை தேடும் பெண் கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் இந்தியில் ‘கஹானி’ என்ற பெயரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அதில் வித்யாபாலன் நடித்தார்.
அனாமிகா படத்துக்காக கணவரை காணவில்லை என்ற போஸ்டரை சென்னை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். ஆங்கிலத்தில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. போஸ்டரில் காணாமல் போனவர் என்று ஒரு ஆண் படமும் அச்சிடப்பட்டுள்ளது. அருகில் சென்று படித்த பிறகுதான் அது அனாமிகா பட விளம்பரம் என்று தெரிய வரும். இந்த போஸ்டருக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பட விளம்பரத்துக்காக கணவரை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி மக்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சி கண்டித்துள்ளது. போலீசிலும் புகார் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. சென்னையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களையும் எதிர்ப்பாளர்கள் கிழித்து வருகிறார்கள். அனாமிகா பட இயக்குனர் சேகர்கம்முலா இது குறித்து கூறும் போது, பட போஸ்டரில் இந்த நபரை தெரிந்தால் தயாரிப்பாளர் பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே யாரையும் இந்த போஸ்டர் குழப்பவில்லை. இந்தியில் இந்த படம் வெளியான போதும் இது போலவே போஸ்டர் ஒட்டி இருந்தனர் என்றார்.

source maalaimalar