15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்றும், நாளையும் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை,பிப்.12-
15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தபால் ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தம் இன்றும் (புதன்கிழமை), நாளையும் நடக்கிறது. இதுகுறித்து, அகில இந்திய தபால் ஊழியர்கள் முன்னேற்ற சங்க (ஏ.பி.இ.பி.யூ) பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடராமன் கூறியதாவது:–
அகில இந்திய அளவில் தபால் துறையில் ஏறக்குறைய 3½ லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் 30 ஆயிரத்தில் இருந்து 35 பேர் பணியில் உள்ளனர். இவர்கள் தவிர கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் (ஜி.டி.எஸ்.) என ஏராளமானவர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் தற்காலிகமாக, ஆனால், பல ஆண்டுகளாக, மிகக்குறைந்த ஊதியத்தில் வேலைசெய்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் நீதிபதி தல்வார் குழு பரிந்துரைகளின்படி, ஜி.டி.எஸ். ஊழியர்களை நிரந்த ஊழியர்களாக அறிவிக்கவேண்டும். ஜி.டி.எஸ். பதவிகளை இலாகா பதவிகளாக மாற்றிட வேண்டும். முதல் மற்றும் நான்காவது சம்பளக்குழுக்களின் அறிவிப்புப்படி, ஜி.டி.எஸ். ஊழியர்கள் பிரச்சினைகளை 7–வது ஊதியக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலைப்பளுவின் அடிப்படையில் சரியான கணக்கீட்டின்படி, தகுதியுள்ள தபால் நிலையங்களுக்கு தேவையான தபால்காரர்களை நியமனம் செய்யவேண்டும். பதவி உயர்வை 1–1–2006 முதல் அமல்படுத்தவேண்டும். புதிய நியமனம் மற்றும் பதவிகளை உருவாக்கிட அறிவிக்கப்பட்டுள்ள
தடை சட்டத்தை ரத்து செய்யவேண்டும்.
தபால்துறையில் அதிகாரிகளின் அத்துமீறிய செயல்பாடுகளை, ஊழல் நடவடிக்கைகள், விருப்பு, வெறுப்பு செயல்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மீது விசாரணை நடத்துவதற்கு மாநில, அகில இந்திய மட்டங்களில் சட்டரீதியான விசாரணைக்குழுக்களை அமைத்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது போன்று 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அஞ்சல்துறை தலைமைக்கு நீண்டகாலமாக கோரி வருகிறோம். இதுவரையில் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 மற்றும் 13–ந்தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்தோம்.
அதன்படி, இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.இந்த வேலைநிறுத்தத்தில் அகில இந்திய அளவில் தபால்துறையில் உள்ள 3 பெரிய சங்கங்கள் கலந்துகொள்கின்றன. தபால்காரர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
இவ்வாறு ஆர்.வெங்கடராமன் கூறினார்.
2 நாள் வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தபால் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் தபால் சேவை குறிப்பாக பட்டுவாடா முழுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, தபால் நிலையங்களில் கார்டு, கவர், ஸ்டாம்ப் விற்பனையும் நடைபெறாது என்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
source maalaimalar